நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அனைவரும் ஒரே கனவை வாழ்ந்தோம். எனக்கு சாதகமான சூழலையும் ஆதரவையும் உருவாக்கித் தந்த என் சகோதரி, அம்மா மற்றும் அப்பாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவர்களின் அன்பு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் விளைபொருள்,” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கே.எஸ். பரத், தனது ஏழு டெஸ்ட் போட்டிகளுடன் சர்வதேச பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தப் போட்டிகளில் அவர் 20.09 சராசரியில் 221 ரன்கள் எடுத்தார், இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 44 ஆகும். அந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில், விக்கெட் கீப்பராக பரத் 21 கேட்சுகளைப் பிடித்ததுடன், ஒரு ஸ்டம்பிங்கையும் செய்தார்.