• Tue. Jan 21st, 2025

24×7 Live News

Apdin News

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப் மைதானம்

Byadmin

Jan 21, 2025


சர்வதேச தரத்திற்கு இணங்க சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் கட்டப்பட்ட புதிய கோல்ஃப் மைதானமான ஈகிள்ஸ் சிட்டாடல் (‘Eagles Citadel golf Course’) , (ஜனவரி 17, 2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற)  எயார்  வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தாவால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ  தலைமை தாங்கினார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய சுற்றுலா சொர்க்கமாகக் கருதப்படும் சீகிரியா பகுதியைச் சுற்றி கட்டப்பட்டு வரும் இந்த கோல்ஃப் மைதானம், சீகிரியா விமானப்படை தளத்தின் அழகிய சூழலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளதோடு  இது கோல்ஃப் வீரர்களுக்கு கோல்ஃப் மைதானத்தை அனுபவிப்பதற்கும் மற்றும்  சவாலான போட்டியை அனுபவிப்பதற்குமான  வாய்ப்பையும் வழங்குகின்றது.

இந்த  புதிய கோல்ஃப் மைதானமானது ” தீவு  டி”(Island T) மற்றும் தீவு பே (Island Bay) போன்ற இடங்களைக் கொண்டுள்ளது.

இலங்கை விமானப்படையானது   திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் கொக்கல விமானப்படை தளங்களில் மூன்று சர்வதேச தர கோல்ஃப் மைதானங்களைக் கொண்டுள்ளது.

மேலும் சிகிரியா விமானப்படை தளத்தில் கட்டப்பட்ட இந்த கோல்ஃப் மைதானம் விமானப்படைக்குச் சொந்தமான நான்காவது கோல்ஃப் மைதானமாகும்.

இந்தப் புதிய கோல்ஃப் மைதானம் கோல்ஃப் விளையாட்டுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

விளையாட்டு உபகரணங்கள், தங்குமிடம், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட கோல்ஃப் விளையாட்டுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக கட்டப்பட்டுள்ள இந்த கோல்ஃப் மைதானம், கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமுள்ள எவரும் மைதானத்திற்குள் நுழைந்து விளையாடும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

By admin