• Sat. Mar 22nd, 2025

24×7 Live News

Apdin News

சர்வதேச விண்வெளி நிலையம் 2031இல் பூமியில் விழுந்து நொறுங்கப் போவது ஏன்? எங்கு விழும்?

Byadmin

Mar 21, 2025


சர்வதேச விண்வெளி நிலையம், நாசா, இஸ்ரோ, விண்வெளி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 415 கி.மீ உயரத்தில் சுற்றி வருகிறது

சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்த சர்வதேச விண்வெளி நிலையம், 2031ஆம் ஆண்டில் தனது பணியை நிறைவு செய்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) 1998இல் தொடங்கப்பட்டதில் இருந்து, விண்வெளித் துறையில் முன்னேற்றத்தின் ஓர் அடையாளமாக இருந்து வருகிறது.

பூமியில் இருந்து சுமார் 400 – 415கி.மீ உயரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம், 109 மீட்டர் நீளம் (ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு) மற்றும் நான்கு லட்சம் கிலோவுக்கும் அதிகமான எடை (400 டன், ஏறக்குறைய 80 ஆப்பிரிக்க யானைகளுக்கு நிகரான எடை) கொண்டது. இது 1998 முதல் 2011 வரை கட்டமைக்கப்பட்டது.

நாற்பதுக்கும் அதிகமான விண்வெளித் திட்டங்கள் மூலம் பூமியில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அவை விண்வெளியில் ஒன்று சேர்க்கப்பட்டன. அப்படியிருக்க, இந்தப் பிரமாண்டமான விண்வெளி நிலையம் செயலிழந்தால் என்ன ஆகும்?

By admin