• Tue. Apr 22nd, 2025

24×7 Live News

Apdin News

சர்வதேச விவகாரங்களில் போப் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறார்?

Byadmin

Apr 22, 2025


போப் மரணம், கத்தோலிக்க திருச்சபைகளின் செல்வாக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்

  • எழுதியவர், லெபோ திசேகோ
  • பதவி, பிபிசி செய்திகள்

வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். இது உலக மக்கள் தொகையின் சுமார் 17 சதவிகிதம் ஆகும்.

2024 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸின் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது, அவரைக் காண பெரும் கூட்டம் கூடியதில் எந்த ஆச்சரியமும் அல்ல. கிழக்கு திமோரின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் அங்கு நடந்த திறந்தவெளி திருப்பலியில் கலந்து கொண்டனர்.

அதற்கு முந்தைய ஆண்டில், ஆப்பிரிக்காவுக்கு அவர் பயணம் செய்த போது, காங்கோ ஜனநாயகக் குடியரசின் கின்ஷாசா விமான நிலையத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் திறனும், அவர்களின் கடும் நம்பிக்கையும், போப்பும் , கத்தோலிக்க திருச்சபையும் உலகளவில் கொண்டிருக்கும் நிலையான செல்வாக்கை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

By admin