• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

சலீம் மேவதி: ரூ.100 கோதுமை திருடியதாக 45 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் ஒருவர் கைது – என்ன நடந்தது?

Byadmin

Feb 19, 2026


சலீம்

பட மூலாதாரம், Saleem’s family

படக்குறிப்பு, சலீம் 45 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.100 மதிப்புள்ள கோதுமையைத் திருடியதற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஐயா, சிறுவயதில் இருந்தபோது நான் என்ன தவறு செய்தேன் என்பது கூட எனக்கு நினைவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமையைத் திருடியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட தகவல் தெரிந்திருந்தால், நானே போலீசிடம் சென்றிருப்பேன்.”

தொலைபேசியில் பேசிய சலீம் மேவதி, பிப்ரவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை தன்னை கைது செய்ய மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்ட போலீசார் வந்ததாகக் கூறினார்.

இந்த வழக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு கார்கோன் மாவட்டத்தின் பல்க்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்சமுந்த் காகட் கிராமத்தில் 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமை திருட்டு போனது தொடர்பானது.

65 வயதான சலீம், 1980-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஆறு நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு வெவ்வேறு பண்ணைகளில் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் மாணிக்சந்த் படேல் மற்றும் லால்சந்த் படேல் ஆகியோர் 1980-ல் புகார் அளித்தனர்.

By admin