0
சளி பிடித்தால் எந்த வேலைகளையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் சோர்வும் அதிகரித்து, சாப்பிடத் தோன்றாத நிலை உண்டாகும். பலவிதமான உபாதைகளும் ஏற்படக்கூடும். சளி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
சளி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் மாசு மற்றும் தூசி மூக்கின் வழியாக உடலுக்குள் செல்வதுதான். எனவே, அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தினமும் மூச்சுப் பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் போன்றவை செய்ய வேண்டும்.
அடிக்கடி வெந்நீர் குடிக்க வேண்டும்.
புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்த வேண்டும்.
குளித்த பிறகு தலையை நன்றாக துவட்டி காய வைக்க வேண்டும்.
மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும்.
மழையில் நனைந்தால் உடனடியாக தலையை துவட்டி காய வைக்க வேண்டும்.
குளிர்காலத்தில்:
ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக மண்பானை நீரை பயன்படுத்தலாம்.
ஐஸ்கிரீம் போன்ற குளிர்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை பின்பற்றினால் குளிர் காலத்தில் சளி நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.