• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

சாட்ஜிபிடி அட்லஸ் பிரவுசரின் தனித்துவமான அம்சங்கள் என்ன? கூகுள் குரோமுக்கு சவால் விடுமா?

Byadmin

Oct 25, 2025


சாட்ஜிபிடியின் புதிய  அட்லஸ் பிரௌசர்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருகிறது.

உலகின் மிகவும் பிரபலமான பிரவுசரான கூகுள் குரோமைப் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய ‘அட்லஸ்’ எனும் வெப் பிரவுசரை ஓபன்ஏஐ செவ்வாயன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது அட்லஸ் அறிமுகமாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஓபன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் இதுகுறித்து பேசுகையில், சாட்ஜிபிடியின் வாராந்திர ஆக்டிவ் பயனர்கள் 800 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், இது பிப்ரவரியில் 400 மில்லியனாக இருந்ததாகவும் கூறினார்.

அட்லஸ் மூலம், பயனர்கள் இணையத்தில் எவற்றையெல்லாம் தேடுகிறார்கள் என்பது குறித்த தரவுகளைச் சேகரித்து, அவர்களின் இணைய வாழ்க்கையில் மேலும் பல பகுதிகளில் ஓபன்ஏஐ விரிவடைய உள்ளது.



By admin