• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல் | Krishnasamy insists on setting up a separate court to investigate honour killings

Byadmin

Aug 18, 2025


திருச்சி: ​சா​திய படு​கொலைகளை விசா​ரிக்க தனி விரைவு நீதி​மன்​றம் அமைக்க வேண்​டும் என புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். திருநெல்​வேலி​யில் ஐ.டி. ஊழியர் கவின் படு​கொலை செய்​யப்​பட்​டதைக் கண்​டித்​து, புதிய தமிழகம் கட்சி சார்​பில் திருச்சி ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி தலைமை வகித்​தார். நிர்​வாகி ஷியாம் கிருஷ்ண​சாமி முன்​னிலை வகித்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் கிருஷ்ண​சாமி கூறிய​தாவது: ஐ.டி. ஊழியர் கவின் படு​கொலை விவ​காரத்​தில் சிபிசிஐடி விசா​ரணை மூலம் தீர்வு கிடைக்​குமா என்று தெரிய​வில்​லை. எனவே, அந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்ற வேண்​டும். நான் எம்​எல்​ஏ​வாக இருந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை நூற்​றுக்​கணக்​கான சாதிய படு​கொலைகள் நிகழ்ந்​துள்​ளன. அப்​போது இருந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்​காத​தால், தற்​போது வரை இது தொடர்​கதை​யாகி வரு​கிறது.

எனவே, தமிழகத்​தில் சாதிய படு​கொலைகளை தடுக்க சிறப்பு சட்​டம் இயற்ற வேண்​டும். அந்த சட்​டத்​தில் உடனடி​யாக குற்​ற​வாளி​களை கைது செய்​து, அவர்​கள் மீதான வழக்​கு​களை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்க தனி விரைவு நீதி​மன்​றம் அமைக்க வேண்​டும். சாதிய படு​கொலைக்கு காரண​மான சமூகச் சூழலைக் கண்​டறிந்​து, அதை களைய வேண்​டும். பள்​ளி, கல்​லூரி​களில் சாதிவெறிக்கு எதி​ரான மனிதப் பண்பை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

திமுக-அ​தி​முக ஆகிய 2 கட்​சிகளும் ஆட்​சி​யில் இருக்​கும்​போது தங்​களின் அமைச்​சர்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள், கிளைச் செய​லா​ளர்​களை சாதி​யின் அடிப்​படை​யில் தேர்வு செய்​யும் கொள்​கையை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கூட்​டணி குறித்து தற்​போது பேசுவதற்கு ஒன்​றுமில்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.



By admin