இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த உள்ளது. இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோதி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது ?
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு மையப் பொருள் என்றும், சில மாநிலங்களில் இதுவரை நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புகள் வெளிப்படையானவை அல்ல என்றும் வைஷ்ணவ் கூறினார்.