• Tue. Apr 7th, 2026

24×7 Live News

Apdin News

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? முழு பின்னணி

Byadmin

Apr 7, 2026


சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு
படக்குறிப்பு, ஜெயராஜ், பென்னிக்ஸ்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

சாத்தான்குளத்தில் 58 வயதான ஜெயராஜும் 31 வயதான அவரது மகன் பென்னிக்சும் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர்.

பொது முடக்கத்தின் காரணமாக கடைகள் திறப்பதற்கு நேர வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்சுக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

By admin