• Mon. Apr 7th, 2025 7:23:35 AM

24×7 Live News

Apdin News

சாம்சங் இந்தியா தொழிலாளர் போராட்டம் மாதக் கணக்கில் நீடிப்பது ஏன்? 5 கேள்வி பதில்கள்

Byadmin

Apr 2, 2025


காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
படக்குறிப்பு, போராட்டம் முடிந்து பணிக்குத் திரும்பியவர்களைப் பல்வேறு வகைகளில் நிர்வாகம் பழிவாங்குவதாகக் கூறி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது, சி.ஐ.டி.யு.

“தீண்டாமையைவிட மோசமான அணுகுமுறையை சாம்சங் இந்தியா கடைபிடிக்கிறது. கீழே உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் தங்கள் எதிரில் அமர்ந்து கேள்வி கேட்பதாக நிர்வாகம் கூறுகிறது. தொழிலாளர் நலத்துறையும் கண்டுகொள்ளவில்லை” எனக் கூறுகிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துகுமார்.

போராட்டம் முடிந்து பணிக்குத் திரும்பியவர்களைப் பல்வேறு வகைகளில் நிர்வாகம் பழிவாங்குவதாகக் கூறி அடுத்தகட்ட போராட்டத்தை சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது.

ஆனால், சி.ஐ.டி.யு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை சாம்சங் இந்தியா நிறுவனம் முழுமையாக மறுத்துள்ளது.

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் என்ன நடக்கிறது? ஏழு மாதங்கள் கடந்தும் போராட்டத்திற்கு முடிவு கிடைக்காதது ஏன்?

By admin