• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

சாம்சங் இந்தியா: முடிவுக்கு வந்த 9 மாத போராட்டம் – 4 கேள்விகளும் பதில்களும்

Byadmin

May 22, 2025


சாம்சங், இந்தியா, தொழில்துறை, தமிழ்நாடு, தொழிலாளர்கள்
படக்குறிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் ஈடுபட்டனர்

“சாம்சங் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து 346 நாள்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. தென்கொரியாவை தவிர எந்த நாட்டிலும் அந்நிறுவனத்துக்கு தொழிற்சங்கம் இல்லை. இந்தியாவில் அதை மாற்றியமைத்துள்ளோம்” எனக் கூறுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க (சிஐடியு) தலைவர் முத்துகுமார்.

ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதாக மே 19 அன்று, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி?

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டா மற்றும் காஞ்சிபுரத்தில் ஆலைகள் உள்ளன.

காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா ஆலையில் வீட்டு உபயோகப் பொருட்களான தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங்மெஷின் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

By admin