• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

சாம்சன் அதிரடி உள்பட இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றிய 5 தருணங்கள் எவை?

Byadmin

Mar 2, 2026


இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு ஒரு சிறப்பான முடிவு கிடைத்திருக்கிறது. ஒரு நாக் அவுட் போட்டி போலக் கருதப்பட்ட இந்த ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை சென்று அட்டகாசமாக வென்றிருக்கிறது இந்திய அணி.

சஞ்சு சாம்சனின் மறக்க முடியாத இன்னிங்ஸ் இந்தியாவுக்கு அரையிறுதி இடத்தை உறுதி செய்து கொடுத்திருக்கிறது. ஓப்பனராக இறங்கி, கடைசி ஓவர் வரை களத்தில் நின்று இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துவிட்டார் சாம்சன். இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவிட்டார்.

சாம்சனின் இந்த இன்னிங்ஸ் போல, இன்னும் சில தருணங்கள் இந்தப் போட்டியில் பெரும் தாக்கம் ஏற்படுத்தின என்று நான் கருதுகிறேன். சில செயல்பாடுகள் போட்டியை இரு அணிகளின் சார்பாகவும் மாறிமாறி இழுத்தன. அப்படியான ஐந்து தருணங்களைப் பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன்.

1. அக்‌ஷர் படேல் வீசிய பவர்பிளே ஸ்பெல்

சூர்யகுமார் டாஸ் வெற்றி பெற்றது இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மைதானத்தில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். அதை டாஸின்போது சூர்யகுமாரும் கூறினார். அதை இந்தியா பேட்டிங் செய்கையிலுமே நன்றாகப் பார்க்க முடிந்தது. இந்தியா முதலில் பந்துவீசியது மிகவும் நல்ல விஷயம்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி சரியான தருணத்தில் ஒரு முடிவை எடுத்தார்கள். பிராண்டன் கிங் நீக்கப்பட்டு ராஸ்டன் சேஸை ஓப்பனராக களமிறக்கும் முடிவு அவர்களுக்குப் பலன் கொடுத்தது. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு ஹோப் உடன் இணைந்து அவர் 68 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் ஆடிய விதம் நிச்சயம் விவாதங்களை ஏற்படுத்தும். ஏனெனில், விக்கெட் போகாத ஒரு சமயத்தில் அவர் 33 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

By admin