• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

சாம்பியன்ஸ் டிராபியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தைப் பழி தீர்த்த இந்தியா

Byadmin

Mar 10, 2025


இந்தியா

பட மூலாதாரம், Getty Images

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதன் மூலம் 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றுள்ளது.

துபையில் இன்று (மார்ச் 09) நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இதே சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி தற்போது பழிதீர்த்துள்ளது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. 252 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்து இந்த தொடரில் வெற்றி பெற்றது.

கடந்த 2002ம் ஆண்டு இலங்கையுடன் சேர்ந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி பகிர்ந்து கொண்டது. அதன்பின் 2013ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றியது. அதன்பின் 3வது முறையாக ரோஹித் சர்மா தலைமையில் தற்போது, 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.

By admin