• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

சிஎஸ்கே அணி லக்னௌவுக்கு எதிரான போட்டியில் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள் என்ன?

Byadmin

May 14, 2026


சென்னை சூப்பர் கிங்ஸ் நெட் ரன்ரேட் பற்றி கவலை கொள்ளவேண்டுமா? லக்னௌவுக்கு எதிராக என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பாபா அபராஜித்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த மே 10-ஆம் தேதி 8 ஆண்டுகளுக்குப் பிறகு 180+ இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், மே 15 அன்று அதே லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. லக்னௌவில் நடக்கும் இந்தப் போட்டி சிஎஸ்கே-வின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்போது 11 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. மீதமிருக்கும் 3 போட்டிகளில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக மோதுகிறது. லக்னௌவுக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்று பெறும்போது 14 புள்ளிகள் பெற்றுவிட முடியும். மேலும், தொடர் வெற்றிகள் பெரும் நம்பிக்கை கொடுக்கும்.

அதன்பிறகு, சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டி சேப்பாக்கத்தில் நடக்கிறது. ஹோம் போட்டியில் அந்த நம்பிக்கையோடு களமிறங்குவது மிகவும் சாதகமான விஷயம். அந்த சாதகத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்றுவிட முடியும். அதுமட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் அணியால் 16 புள்ளிகளுக்கு மேல் எடுக்க முடியாத என்ற சூழ்நிலையும் ஏற்பட்டுவிடும். அது கூடுதல் பிளஸ்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் ஆமதாபாத் சென்று குஜராத்தை சந்திக்கும்போது நெருக்கடி குறைவாக இருக்கும். டாப் 4 வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அந்த நல்ல நிலை ஏற்படுவதற்கு லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுவது அவசியம்.

அதேசமயம், லக்னௌ அணி அதிகாரபூர்வமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இது அவர்கள் மீதான நெருக்கடிகளையெல்லாம் உடைத்து ஒருவகையான சுதந்திரத்தைக் கொடுக்கலாம். இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் ஆடும்போது, அவர்கள் வேறு வகையான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், தற்போது ஆடிவரும் நல்ல கிரிக்கெட்டை சிஎஸ்கே தொடரும்போது அவர்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

By admin