• Wed. Dec 17th, 2025

24×7 Live News

Apdin News

சிஎஸ்கே ஐபிஎஸ் வரலாற்றில் இல்லாத விலைக்கு வாங்கிய பிரசாந்த், கார்த்திக் யார்? முழு பின்னணி

Byadmin

Dec 17, 2025


ஐபிஎல் மினி ஏலம், சிஎஸ்கே, பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/GAURAV

படக்குறிப்பு, பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா

ஐபிஎல் கோடீஸ்வரர்களை உருவாக்கும் ஒரு இயந்திரமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டும், இது பல கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டு கோடீஸ்வரர்களாக உருவெடுத்தவர்களில் ஆகிப் நபி டார், பிரசாந்த் வீர் திரிபாதி மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோர் அதிகம் அறியப்படாத வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தேஜஸ்வி சிங் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 2.6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முகுல் செளத்ரி ஆகியோரையும் இதே பிரிவில் சேர்க்கலாம்.

பிரசாந்த் வீர் திரிபாதி மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலா ₹14.2 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றிலேயே சர்வதேச போட்டிகளில் விளையாடாத அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் இவர்கள்தான்.

ஆகிப் நபி டார் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ₹8.4 கோடிக்கு வாங்கப்பட்டார்.

By admin