• Tue. Apr 8th, 2025

24×7 Live News

Apdin News

சிஎஸ்கே தோல்வி: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? தோனி விளக்கம்

Byadmin

Apr 7, 2025


CSK vs DC, தோனி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

“சேப்பாக்கத்துக்கு டி20 மேட்ச் பார்க்க வந்தோமா இல்லை, டெஸ்ட் மேட்ச் பார்க்க வந்தோமானு சந்தேகம் வந்துவிட்டது. ஹைலைட்ஸ் போட முடியாத அளவுக்கு சிஎஸ்கே மோசமாக பேட் செய்தார்கள், வெற்றிக்காக முயற்சிக்கவில்லை. தோனி ஓய்வு அறிவித்துவிட்டு இளம் வீரருக்கு வாய்ப்புத் தரலாம்”

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-டெல்லி கேபிடல்ஸ் ஆட்டம் முடிந்த பின் ரசிகர் ஒருவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.

அந்த போட்டியில் சேஸிங்கின் போது தோனி 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். போட்டியை தோனியின் பெற்றோர் நேரில் பார்த்ததை சுட்டிக்காட்டி, ‘தோனி இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவார்’ என்பது போன்ற செய்திகள் வெளியாயின.

தோனி ஓய்வு குறித்த செய்திகள் கடந்த சீசன் முதலே தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதுகுறித்து பல முறை விளக்கம் அளித்துவிட்ட தோனி, இப்போதும் மீண்டும் தனது முடிவை தெளிவுபடுத்தியுள்ளார்.

By admin