0
சிக்குன்குனியா பாதிப்பு அதிகரிக்கும் காலங்களில், “சிக்கன் சாப்பிட்டால் சிக்குன்குனியா வரும்” என்ற ஒரு தவறான நம்பிக்கை பலரிடமும் காணப்படுகிறது. இதனால் பலர் தேவையில்லாமல் சிக்கன் உள்ளிட்ட சத்தான உணவுகளை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கைக்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா? உண்மை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
நிறைய பேர் சிக்கன் சாப்பிடுவதால் தான் சிக்குன்குனியா வருவதாக நினைத்து, சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால் சிக்கனுக்கும், சிக்குன்குனியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாம் சாப்பிடும் சிக்கன் CHICKEN.இதுவோ CHICKUN.கிமோகாண்டே என்னும் ஆப்பிரிக்க மொழியில் இருந்து இந்த வார்த்தையை எடுத்துள்ளனர். அதற்கான சரியான அர்த்தம் என்னவென்றால் கடுமையான மூட்டு வலியையும், தசை வலியையும் ஏற்படுத்தக்கூடிய காய்ச்சல் தான் இதன் அர்த்தம்.
சிக்குன்குனியா என்றால் என்ன?
சிக்குன்குனியா என்பது வைரஸ் தொற்று நோய். இது Aedes வகை கொசுக்கள் (Aedes aegypti, Aedes albopictus) கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.
முக்கிய அறிகுறிகள்:
அதிக காய்ச்சல்
கடும் மூட்டு வலி
தலைவலி
உடல் சோர்வு
சிலருக்கு தோல் அரிப்பு
சிக்கன் சாப்பிடுவதுக்கும் சிக்குன்குனியாவுக்கும் தொடர்பு உள்ளதா?
இல்லை. எந்த தொடர்பும் இல்லை. சிக்குன்குனியா கொசு கடியால் மட்டுமே பரவுகிறது. சிக்கன் சாப்பிட்டதால் இந்த வைரஸ் உடலுக்குள் செல்ல முடியாது. சமைத்த சிக்கன் உணவு நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை
இதனால், “சிக்கன் சாப்பிட்டால் சிக்குன்குனியா வரும்” என்பது முற்றிலும் தவறான நம்பிக்கை.
சிக்குன்குனியா காலத்தில் சிக்கன் சாப்பிடலாமா?
ஆம், மருத்துவர் தடை விதிக்காவிட்டால், அளவோடு சிக்கன் சாப்பிடலாம்.
சிக்கன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
புரதச்சத்து அதிகம்
உடல் பலத்தை அதிகரிக்க உதவும்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
ஆனால், எண்ணெயில் பொரித்த சிக்கன், மிக காரமான, மசாலா அதிகமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சிக்குன்குனியாவைத் தடுக்கும் வழிகள்
வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்க விடக்கூடாது
கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்
முழு கை, முழு கால் உடைகள் அணிய வேண்டும்
காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
சிக்குன்குனியா என்பது உணவால் வரும் நோய் அல்ல.
அது கொசு மூலம் பரவும் வைரஸ் தொற்று.
எனவே,
✔️ சிக்கன் சாப்பிட்டால் சிக்குன்குனியா வராது
✔️ தவறான நம்பிக்கைகளை நம்பாமல், சுத்தம் மற்றும் கொசு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்