• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

சிங்கப்பூரில் சிறுமி தலையை தொட்டதற்காக தாக்கப்பட்ட முதியவருக்கு ஆதரவாக கடைக்கு திரண்ட மக்கள் – என்ன நடந்தது?

Byadmin

Aug 17, 2026


சிங்கப்பூரில் சிறுமி தலையை தொட்டதற்காக தாக்கப்பட்ட முதியவருக்கு ஆதரவாக கடைக்கு திரண்ட மக்கள் - என்ன நடந்தது?
படக்குறிப்பு, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முதியவர் குடும்பம் நடத்தி வரும், ‘பெய்-இங் வான்டன் நூடுல்’ கடைக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்

    • எழுதியவர், கோ ஈவ் மற்றும் கெல்லி என்ஜி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிங்கப்பூரில் உள்ள உணவு வளாகம் ஒன்றில் சிறுமியின் தலையை தொட்ட முதியவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு வளாகத்தில் சிறுமியின் தலையை முதியவர் ஒருவர் தொட்டத்தை தொடர்ந்து, அந்தச் சிறுமியின் தந்தை என நம்பப்படும் ஒருவர் ஆத்திரமடைந்து, 73 வயதான அந்த முதியவரைத் தள்ளியுள்ளார்.

சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் செக்யூரிட்டி கேமரா காட்சிகள் வார இறுதியில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. பெற்றோரின் அனுமதியின்றி முதியவர் குழந்தையைத் தொட்டிருக்கக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். எனினும், பெரும்பாலானோர் தலையில் தொட்டதற்காக உடல் ரீதியாகத் தாக்கியது அளவுக்கு அதிகமான எதிர்வினை என்று தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 40 வயது நபரை அடையாளம் கண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

“இந்தச் சம்பவம் அல்லது அதன் பின்னணி குறித்து ஊகங்கள் தெரிவிக்க வேண்டாம்” என்றும், போலீசார் “விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பான உண்மைகளை உறுதி செய்ய” அனுமதிக்குமாறும் பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

By admin