• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

“சிசுவும், பிளாஸ்டிக்கும்” மரணித்த கர்ப்பிணி யானை வயிற்றில் இருந்தது இதுதான்

Byadmin

May 22, 2025


காணொளிக் குறிப்பு, மயங்கி விழுந்து கர்ப்பிணி யானை உயிரிழப்பு

“சிசுவும், பிளாஸ்டிக்கும்” மரணித்த யானை வயிற்றில் இருந்தது இதுதான்

கடந்த மே17-ம் தேதி கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு கர்ப்பிணி யானை தனது குட்டியுடன் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானையை மீட்க கும்கி யானையை வனத்துறை அழைத்து வந்துள்ளனர். கும்கியை பார்த்ததும் குட்டி யானை நகர்ந்தது. ஆனால், கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உடற்கூராய்வில் உயிரிழந்த பெண் யானையின், வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்தது என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். மேலும் யானையின் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கல்லீரல் கடுமையாக வீங்கி பாதிக்கப்பட்டிருந்தது என வன கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin