• Sat. Dec 20th, 2025

24×7 Live News

Apdin News

சிட்னியில் 7 பேர் கைது: தாக்குதலுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை!

Byadmin

Dec 20, 2025


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பொண்டி கடற்கரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படும் நிலையில், அவர்கள் சென்ற இரண்டு கார்களை வழிமறித்து, அதிகாரிகள் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்களும் பொண்டி கடற்கரை தாக்குதலை நடத்தியவர்களும் ஒரே சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் என சிட்னி பொலிஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், இவர்களுக்கிடையில் நேரடி தொடர்பு இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் தற்போது இல்லை என்றும் சிட்னி பொலிஸ் கூறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் ABC வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

By admin