• Tue. Dec 16th, 2025

24×7 Live News

Apdin News

சிட்னி சம்பவம்: சிறுமி உட்பட 15 பேர் உயிரிழப்பு; தந்தை–மகனே துப்பாக்கிதாரிகள்!

Byadmin

Dec 15, 2025


சிட்னியின் பொண்டி கடற்கரை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக சிட்னி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று (14) நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், துப்பாக்கிச்கூடு நடத்தியவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

50 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், அவரது 24 வயதுடைய மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

யூத சமூகத்தின் கொண்டாட்ட நிகழ்வொன்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் சுட்டிக்காட்டுகின்றன. இச்சம்பவத்தில் 29க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி : ஆஸ்திரேலியா- சிட்னியில் துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரிதாக நடைபெறுவதால், இந்த நிகழ்வு மேலும் அதிர்ச்சியளிப்பதாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிரீமியர் கிறிஸ் மின்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

தாக்குதலாளர்களில் ஒருவருடன் நேரடியாக மோதிச் துப்பாக்கியைப் பறித்த நபரின் துணிச்சலையும் அவர் பாராட்டி, அவரது செயல் பல உயிர்களை காப்பாற்றியதாகக் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள், துப்பாக்கிச் சத்தம் முதலில் வானவேடிக்கை போலக் கேட்டதாகவும், பின்னர் மக்கள் கட்டுப்பாடின்றி பின்வாசல் வழியாக வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளனர். சிலர் இறந்து கிடந்தவர்களின் உடல்களை ஆங்காங்கே கண்டதாக அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட துப்பாக்கிதாரியுருடன் தொடர்புடைய சில தகவல்கள் பாதுகாப்புத் துறைக்கு முன்பே தெரிந்திருந்தாலும், அவர் உடனடி அச்சுறுத்தலாக கருதப்படவில்லை என பொலிஸ் ஆணையாளர் விளக்கமளித்தார்.

சமூக ஊடகங்களில் பரவும் பெயர்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

By admin