• Thu. Dec 18th, 2025

24×7 Live News

Apdin News

சிட்னி துப்பாக்கிச்சூடு: தடுக்க முயன்ற தம்பதியினர் சுட்டுக் கொலை!

Byadmin

Dec 18, 2025


ஆஸ்திரேலியாவின் சிட்னி பொண்ட் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், தாக்குதலாளரைத் தடுக்க முயன்ற தம்பதியினர் உயிரிழந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 69 வயதான போரிஸ் குர்மன் மற்றும் அவரது மனைவி 61 வயதான ஸோஃபியா குர்மன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன. இருவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் அருகில் இருந்த காரில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அந்தக் வீடியோ தற்போது Xiaohongshu சமூக ஊடகத் தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், போரிஸ் குர்மன் துப்பாக்கியுடன் இருந்த சஜித் அக்ரம் மீது பாய்ந்து, அவரைத் தடுக்க முயல்வதும், அவரது கையிலிருந்த துப்பாக்கியைப் பறிக்க முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது. இருவரும் கீழே விழுந்த பின்னர், மீண்டும் எழுந்த சஜித் அக்ரம் துப்பாக்கியை எடுத்துச் சுட்டதில் போரிஸும் ஸோஃபியாவும் உயிரிழந்தனர்.

வீடியோவைப் பதிவிட்ட நபர், இந்தச் சம்பவம் தன்னை மனமுடையச் செய்ததாகக் கூறியதுடன், “முதியவர் ஒருவர் துப்பாக்கிக்காரரைத் தடுக்க கடைசி வரை போராடினார்” என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள், தைரியமாக துப்பாக்கிச்சூட்டாளரைத் தடுக்க முயன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இதற்கு முன்னர், இதே பொண்ட் கடற்கரைத் தாக்குதலில் துப்பாக்கிதாரியை தடுத்து நிறுத்த முயன்ற 43 வயதான அகமது அல் அகமது என்பவர் பின்புறமாகப் பிடித்து, அவரது ஆயுதத்தைப் பிடுங்க முயன்றார்.

இந்த முயற்சியின் போது அவர் பல முறை சுடப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி நேரில் சந்தித்தார்.

அவரது தைரியமான செயல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளதுடன், அது ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என பிரதமர் அல்பனீசி பாராட்டினார்.

By admin