• Sun. Dec 28th, 2025

24×7 Live News

Apdin News

சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வர என்ன காரணம்? ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Dec 28, 2025


சிந்து சமவெளி நாகரிகம் வறட்சியால் அழிந்ததா? புதிய ஆய்வு கூறும் முக்கிய தகவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆரம்ப கால ஹரப்பா காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய 11 பக்க ஆய்வின்படி, சிந்து சமவெளி நாகரிகம் நான்கு பெரிய வறட்சிகளை எதிர்கொண்டது

சிந்து சமவெளி நாகரிகம் எப்போது, எப்படி முடிவுக்கு வந்தது என்பது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாகத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்திய ஆய்வு ஒன்று, ‘ஹரப்பாவின் வீழ்ச்சி என்பது பேரழிவு ஏற்படுத்திய ஒரு நிகழ்வால் ஏற்படவில்லை, மாறாக தொடர்ச்சியான மற்றும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நீடித்த வறட்சியால் நிகழ்ந்தது,” எனத் தெரிவித்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு தொடர்பாகப் பல்வேறு கோட்பாடுகள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், போரினால் ஏற்பட்ட அழிவு, இயற்கைப் பேரழிவுகளால் நகரம் உருக்குலைந்தது, சிந்து நதியில் வெள்ளம் ஏற்பட்டு அதன் போக்கை மாற்றியது எனப் பலவும் அடங்கும்.

அதேநேரத்தில் காக்கர் என்கிற நதி வற்றி அதன் அருகில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் என்கிற கோட்பாடும் உள்ளது.

By admin