• Fri. Apr 25th, 2025

24×7 Live News

Apdin News

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்?பாக்., நிபுணர்கள் கூறுவது என்ன?

Byadmin

Apr 25, 2025


சிந்து நீர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 1960ல் இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாகிஸ்தானுடனான 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக கடந்த புதன்கிழமை இந்தியா அறிவித்தது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் புதன்கிழமை நடந்து முடிந்தபிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, புதன்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “1960ம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக நிறுத்தும்வரை இது தொடரும்,” என்று கூறினார்.

By admin