• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

“சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகக் குழு தலைவராக திருமாவளவன் இருப்பது ஏன்?” – அண்ணாமலை | Thirumavalavan role in a CBSE school chennai and Annamalai alleges

Byadmin

Feb 20, 2025


சென்னை: “சென்னை வேளச்சேரியில் மூன்று மொழிகளை கற்பிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான்.

அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



By admin