• Tue. Mar 4th, 2025

24×7 Live News

Apdin News

சிம்ஃபொனி என்றால் என்ன? இளையராஜாவின் முதல் சிம்ஃபொனி லண்டனில் வெளியிடப்படுவது ஏன்?

Byadmin

Mar 3, 2025


இளையராஜா, சிம்ஃபொனி, இசை

பட மூலாதாரம், Facebook

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? சிம்ஃபொனியை எழுதி, நிகழ்த்துவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது?

கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன?

பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஒரு ஒத்திசைத் தொகுப்பு.

இந்த இசைத் தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒரு பகுதி சொனாடா என்ற வடிவத்தில் இருக்கும். சிம்ஃபொனிகளுக்கு என மிகத் தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.

By admin