• Thu. Jan 30th, 2025

24×7 Live News

Apdin News

சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்ஸிஜன் தயாரிக்க திட்டம் – எப்படி தெரியுமா?

Byadmin

Jan 29, 2025


நிலவில் ஆக்ஸிஜனை உருவாக்குவது எப்படி?

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நாசாவின் ஆர்டெமிஸ் விண்கலம், 2027-ல் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது

  • எழுதியவர், க்றிஸ் பரானியுக்
  • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்

ஒரு ராட்சச கோளத்தின் உள்ளே பொறியாளர்கள தங்களது உபகரணங்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னே வண்ணமயமான வயர்களால் சூழப்பட்ட பளபளப்பான உலோக கருவி ஒன்று இருந்தது. இந்தக் கருவி, காற்றே இல்லாத நிலவில் ஆக்ஸிஜன் தயாரிக்க உதவும் என நம்புகிறார்கள்.

அந்த கோளத்தை விட்டு அவர்கள் வெளியேறியவுடனே பரிசோதனை தொடங்கியது. பெட்டி போன்ற அந்த கருவியினுள் -நிலவின் மண்ணில் காணப்படுவதற்கு இணையான துகள்கள் மற்றும் கூரான கற்களால் ஆன ரெகோலித் ரசாயன கலவை சிறிய அளவில் செலுத்தப்படுகிறது.

விரைவில் அந்த கலவை உருகி அரை நீர்ம வடிவெடுத்துவிட்டது. அதில் ஒரு அடுக்கு 1650 செல்சியஸ் வெப்பத்திற்கு மேல் சூடுபடுத்தப்படுகிறது. அதனுடன் சில எதிர்விளைவு மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டவுடன், ஆக்ஸிஜன் அடங்கிய குமிழிகள் எழத் தொடங்குகின்றன.

“பூமியில் பரிசோதிக்கக் கூடிய எல்லாவற்றையும் சோதனை செய்து பார்த்துவிட்டோம்,நிலவுக்கு செல்வது அடுத்த கட்டம்”என்கிறார் சியரா ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருக்கும் பிராண்ட் வைட்.



By admin