• Sat. Aug 23rd, 2025

24×7 Live News

Apdin News

சிரஞ்சீவி: அமிதாப் பச்சனை விட அதிக சம்பளம் பெற்று உச்சம் தொட்ட கதை

Byadmin

Aug 23, 2025


சிரஞ்சீவி

பட மூலாதாரம், @KChiruTweets

படக்குறிப்பு, ‘தி வீக்’ என்ற ஆங்கில பத்திரிகை, சிரஞ்சீவி எவ்வளவு அதிகமான சம்பளம் பெறுகிறார் என்பதை விளக்கும் வகையில் ‘பச்சனை விட அதிகம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

அது 1992, ஜூலை மாதத்தின் கடைசி வாரம்.

விஜயவாடா காந்திநகர் சினிமா தியேட்டர் சாலையில், ராஜ் யுவராஜ் தியேட்டரில் கரானா மொகுடு என்ற தெலுங்கு படம் திரையிடப்பட்டது.

ஷைலஜா தியேட்டரில் ஆஜ் கா கூண்டராஜ் என்ற ஹிந்திப் படம் ஓடிக்கொண்டிருந்தது.

‘தி ஹண்டர்ஸ் ஆஃப் தி இந்தியன் ட்ரெஷர்’ மற்றும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்ட கோடமாசிம்ஹம் திரைப்படம் ஊர்வசி வளாகத்தில் திரையிடப்பட்டன.

By admin