• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு | Supreme Court to hear case against Special Investigation Team

Byadmin

Oct 9, 2025


சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு குறித்து விசா​ரிப்​ப​தற்​காக சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிர​ச்சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், இந்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. கட்​சி​யின் தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா சார்​பில், அவரது வழக்​கறிஞர் யாஷ் எஸ்​.​விஜய் தாக்​கல் செய்​துள்ள மனு​: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்​தவர்​களுக்கு தவெக சார்​பிலும், கட்சி தொண்​டர்​கள் சார்​பிலும் அவசர, மருத்​துவ உதவி​கள் தாமதமின்றி உடனடி​யாக வழங்​கப்​பட்​டன.

நெரிசலில் சிக்கி பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்ட 41 பேர் உயி​ரிழந்த நிலை​யில், அவர்​களை கைவிட்​டு​விட்டு விஜய் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் ஓடி​விட்​ட​தாக சென்னை உயர் நீதி​மன்​றம் கடுமை​யான கருத்​துகளை தெரி​வித்​துள்​ளது. இந்த வழக்​கில் நியாய​மான விசா​ரணை நடை​பெற​வில்​லை.

தமிழக போலீ​ஸாரின் செயல்​பாடு குறித்து அதி ருப்தி தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்​றம், அவர்களைக் கொண்டே சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​திருப்​பது தவெக​வுக்​குத்​தான் பாதிப்பை ஏற்​படுத்​தும்.

சிலர் முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு நடத்​திய சதி​யின் விளை​வாகவே உயி​ரிழப்பு சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. உண்​மை​களை வெளியே கொண்​டுவர சுதந்​திர​மான விசா​ரணை தேவை.

எனவே, உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை ஆணையம் அமைத்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டுள்​ளது. இதை அவசர வழக்​காக விசா​ரிக்க கோரி உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் அமர்​வில் முறையீடு செய்யப்​பட்​டது. இதை ஏற்ற நீதிப​தி​கள், வழக்​கை நாளை வி​சா​ரிப்​ப​தாக தெரி​வித்​துள்​ளனர்​.



By admin