• Sun. Oct 12th, 2025

24×7 Live News

Apdin News

சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு | Supreme Court to deliver verdict tomorrow in TVK case

Byadmin

Oct 12, 2025


புதுடெல்லி: கரூர் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நாளை தீர்ப்​பளிக்​க​வுள்​ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பெண்​கள், குழந்​தைகள் என 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ர் விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​தும் உத்​தர​விட்​டிருந்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை எதிர்த்து தவெக சார்​பில் ஆதவ் அர்​ஜூ​னா, உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அத்​துடன், பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் தரப்​பிலும் சிபிஐ விசா​ரணை கோரி மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை,உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. அப்​போது, கரூர் சம்​பவம் தொடர்​பான வழக்கை உயர் நீதி​மன்ற மதுரை கிளை விசா​ரிக்​கும்​போது, சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் என கேள்வி எழுப்​பிய நீதிப​தி​கள், இதுதொடர்​பாக தமிழக அரசு தரப்​பில் பிர​மாண பத்​திரம் தாக்​கல் செய்ய உத்​தர​விட்டு தீர்ப்பை தள்ளி வைத்​திருந்​தனர். இந்​நிலை​யில் இந்த வழக்​கில் நீதிப​தி​கள் நாளை (அக்​.13) தீர்ப்​பளிக்​கஉள்​ளனர்​.



By admin