பன்னிபிட்டிய பிரதேசத்தில் சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சிறுத்தையின் பற்கள், நகங்களுடன் இருவர் கைது! appeared first on Vanakkam London.