0
நம் உடலில் முக்கிய பங்கை வகிக்கும் உறுப்புகளில் சிறுநீரகம் ஒன்று. உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டியும், நீர்ச்சத்தை சீராக பராமரித்தும் சிறுநீரகம் செயல்படுகிறது. எனவே, சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம்.
இந்நிலையில், சிவப்பு குடைமிளகாய் (Red Capsicum) என்பது சிறுநீரகங்களுக்கு மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
பொட்டாசியம் குறைவாக உள்ளதால், சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இதில் வைட்டமின் A, C, B6, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்று பல சத்துகள் நிறைந்துள்ளன.
இவை அனைத்தும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும், சிவப்பு கேப்சிகத்தில் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் காணப்படுகிறது.
இது உடலில் ஏற்படும் அரிச்சுவைச் செல்களைத் (Free Radicals) தடுக்கும்.
புற்றுநோயை எதிர்க்கும் சக்தியை வழங்கும்.
உடல் நலனுக்காக உணவில் சிவப்பு கேப்சிகத்தைச் சேர்ப்பது சிறந்த தேர்வாக இருக்கும். இதன் வழியாக, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும், மேலும் பலவித நோய்களை எதிர்கொள்வதற்கான உடலின் ஆற்றலும் உயர்கிறது.
(முக்கிய குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தவொரு தகவலையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்)