• Sun. Mar 29th, 2026

24×7 Live News

Apdin News

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

Byadmin

Mar 29, 2026


சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம், Getty Images

சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது.

மக்கள் பெரும்பாலும், இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும் பிரச்னை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இது இளம் வயதினர் மத்தியிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது.

சிறுநீர் கழித்த பிறகு, சில துளிகள் வெளியேறித் தங்கள் உள்ளாடைகளை நனைப்பதையோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துவதையோ பல ஆண்கள் கவனிக்கின்றனர். இது சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் இதைப் பற்றிப் பேச கூச்சப்படுகிறார்கள்.

“சிறுநீர் கழித்த பின் சொட்டுதல்” என்ற பிரச்னை பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. பொதுவாக, கூச்சம், மற்றவர்கள் கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சம், “இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும்” என்ற தவறான நம்பிக்கை அல்லது “இதுவொரு தீவிரமான பிரச்னை இல்லை” என்ற எண்ணம் ஆகியவை அதற்குக் காரணமாக அமைகின்றன.

உண்மையில், பி.எம்.டி என்பது வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. பகல் நேரங்களில் சிறு துளி சிறுநீர் வெளியேறுவது, குறிப்பாகப் பணியிடத்திலோ அல்லது பயணம் செய்யும்போதோ, அதை அனுபவிப்பவருக்கு உள்ளாடை நனைந்த உணர்வையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தக்கூடும். அவர்கள் அடிக்கடி தங்கள் ஆடைகளைச் சரிபார்த்துக் கொண்டே இருக்க நேரிடலாம். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவும், தன்னம்பிக்கையைப் பாதிக்கவும் கூடும்.

By admin