• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

சிறுமியாக இருந்தபோது ராணி இரண்டாம் எலிசபெத் எழுதிய கடிதம் £25,000க்கு ஏலத்தில் விற்பனை

Byadmin

Feb 28, 2026


இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் சிறுமியாக இருந்தபோது, சுமார் 10 வயதில் எழுதிய பருவக் கடிதம், சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் £25,000க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கென்ட் பகுதியில் நடைபெற்ற இந்த ஏலத்தில், 1936 முதல் 1940 ஆம் ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்த அரிய கடிதம், குறிப்பிடத்தக்க விலைக்கு கைமாறியுள்ளது. இக்கடிதம், விண்ட்சர் நகரிலுள்ள ராயல் லாட்ஜில் தலைமை வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பீட்ரைஸ் ஸ்டில்மேனுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், தன்னிடம் இருந்த பறவைகள் மற்றும் தங்கமீன்களின் நலன் குறித்து சிறுமியான எலிசபெத் அக்கறையுடன் விசாரித்துள்ளார். மேலும், தாம் தேர்ந்தெடுத்த ப்ரிம்ரோஸ் மலர்களை அங்குள்ள ஊழியர்களிடையே பகிர்ந்து கொள்ளுமாறும் பணிவுடன் கோரியுள்ளார்.

இந்தக் கடிதம், அதன் வரலாற்றுப் பெறுமதி மட்டுமன்றி, எதிர்காலத்தில் உலகின் முக்கிய ராணியாக மாறிய எலிசபெத்தின் குழந்தைப் பருவ குணாதிசயத்தையும் பிரதிபலிப்பதாக ஏல நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அக்கறை, பணிவு மற்றும் மனிதநேயம் ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் இந்தக் கடிதம், வரலாற்று ஆவணமாகவும் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

By admin