• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

சிலம்பரசனின் குரலில் வெளியாகி கவனம் ஈர்க்கும் ‘ஏண்டி விட்டு போன..’

Byadmin

Jan 30, 2025


இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ டிராகன் ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஏண்டி விட்டுப் போன ‘ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் டி. ஆர். சிலம்பரசன் குரலில் இந்த பாடல் வெளியாகி இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டிராகன் ‘ எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கே. எஸ். ரவிக்குமார் , கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் , கயாடு லோஹர் ,மரியம் ஜார்ஜ், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் – கல்பாத்தி எஸ். கணேஷ்-  கல்பாத்தி எஸ். சுரேஷ் – ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ ஒரு நொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயேடி..’எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கோ. சேஷா எழுத, பின்னணி பாடகரும், முன்னணி நட்சத்திர நடிகருமான டி. ஆர். சிலம்பரசன் பாடியிருக்கிறார்.

காதல் பிரிவை மையப்படுத்தி மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடலில் இடம் பிடித்திருக்கும் வரிகளும், சிலம்பரசனின் குரலில் இழையோடும் சோகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

By admin

பட்ஜெட் 2025: வேலைவாய்ப்பு, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை – இந்திய அரசு முன் உள்ள சவால்கள் என்ன?
நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவை சேனாதிராஜா அவர்களைப் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கான தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த கௌரவ சேனாதிராஜா அவர்கள், இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட அதேவேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை பாராளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது. அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். க அமையட்டும் – பிரதமர்
தமிழகம் முழுவதும் ஏப். 28-க்குள் கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்: நீதிமன்றம் சொல்வது என்ன? | Flagpoles across Tamil Nadu must be removed by April 28th