• Wed. Jan 7th, 2026

24×7 Live News

Apdin News

சிலியா புளோரஸ்: வெனிசுலா அதிபர் மதுரோ மனைவியின் முழு பின்னணி என்ன?

Byadmin

Jan 6, 2026


 சிலியா புளோரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபரின் மனைவியாவதற்கு முன்பே, சிலியா புளோரஸ் தனது சொந்த உழைப்பால் சக்திவாய்ந்த அரசியல் பின்புலத்தை கொண்டிருந்தார்.

நீண்ட காலமாக, வெனிசுவேலாவில் அதிபரின் மனைவி என்பதற்கும் மேலான முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்து வருகிறார் சிலியா ஃப்ளோரஸ்.

அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மனைவியான இவர், அரசாங்கத்தின் மிகவும் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராவார். ஆதரவாளர்களால் இவர் பெரும்பாலும் “முதல் போராளி” என்று குறிப்பிடப்படுகிறார்.

1956-ஆம் ஆண்டு பிறந்த சிலியா ஃப்ளோரஸ், தனது கணவரின் அரசியல் வாழ்க்கைக்கு இணையாகத் தனது சொந்த அரசியல் பாதையையும் உருவாக்கிக் கொண்டார். சில நேரங்களில் அவரது கணவரை விட உயர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

குறிப்பாக 2013-ல் மதுரோ அதிபரான பிறகு, நாட்டின் அரசியல் திசையை வடிவமைப்பதில் சிலியா ஃப்ளோரஸ் தீவிரப் பங்காற்றினார்.

இந்த சனிக்கிழமையன்று, வெனிசுவேலாவிற்குள் அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையில் அவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

By admin