• Wed. Nov 5th, 2025

24×7 Live News

Apdin News

சில்லறை கேட்டு பயணிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் | Bus operators instructed not to force passengers to pay change

Byadmin

Nov 5, 2025


சென்னை: பேருந்​துகளில் பயணி​களிடம் சில்​லறை கேட்டு கட்​டாயப்​படுத்​தக் கூடாது என்​று, நடத்​துநர்​களுக்​கு, மாநகர போக்​கு​வரத்து கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்​து, மாநகர போக்​கு​வரத்து கழக இணை மேலாண் இயக்​குனர் வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​: மாநகர பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போது பயணச் சீட்​டுக்கு உரிய சில்​லறை​யுடன் பயணிக்க வேண்​டும் எனக்கூறி வாக்​கு​வாதத்​தில் நடத்​துநர்​கள் ஈடு​படு​வ​தாக பயணி​களிடம் இருந்து தொடர்ச்​சி​யான புகார்​கள் வரு​கின்​றது.

எனவே, பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போதே பயணச்​சீட்டு வாங்க சில்​லறை கொடுக்க வேண்​டும் என நிர்​பந்​தம் செய்​யக் கூடாது. பயணச்​சீட்​டைப் பெற பயணி​கள் அளிக்​கும் பணம் மற்​றும் நாண​யங்​களை பெற்று உரிய மீதி தொகையை வழங்​கு​மாறு மாநகரப் போக்​கு​வரத்து கழக நடத்​துநர்​களுக்கு அறி​வுறுத்​தப்​படு​கிறது.

பணிமனை​களில் பணி​யின் போது நடத்​துநர்​களுக்கு வழங்​கப்​படும் முன் பணத்தை பயணி​களுக்​கு, பயணச்​சீட்டு வழங்​கும் போது முறை​யாக பயன்​படுத்த வேண்​டும். பயணி​களிடம் சில்​லறை தொடர்​பான விவாதங்​கள் தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்​டும்.

இது தொடர்​பாக புகார்​கள் பெறப்​பட்​டால் சம்​மந்​தப்​பட்ட நடத்​துநர்​கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin