0
‘காந்தாரா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ எனும் திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி , ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவய்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி அஜினீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். புராண அடிப்படையிலான பிரம்மாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் நாட்டார் கதைகளின் அடிப்படையிலும்… புராண இதிகாசங்கள் மீதான மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், பிரம்மாண்டமாக வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருப்பதால்… ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது.