• Sat. Feb 22nd, 2025

24×7 Live News

Apdin News

சிவன் ஆலயங்களில் நவக்கிரகங்களின் திசைகள் எப்படி இருக்கும்?

Byadmin

Feb 21, 2025


அனைத்து சிவாலயங்களிலும், ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நவகிரகங்கள் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளன. நடுவில் அமைந்துள்ள கிரகம் சூரியன் ஆகும். சூரியனின் கிழக்கில் சுக்கிரன், மேற்கில் சனி, வடக்கில் குரு, தெற்கில் செவ்வாய், வடகிழக்கில் புதன், தென்கிழக்கில் சந்திரன், வடமேற்கில் கேது, தென் மேற்கில் ராகு ஆகியவைகள் அமைந்துள்ளன. இதன் மூலம் சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார்.

சந்திரன் மேற்கு, செவ்வாய் தெற்கு, புதன் வடக்கு, குரு வடக்கு, சுக்கிரன் கிழக்கு, சனி மேற்கில், ராகு மற்றும் கேது தெற்கில் அமைந்திருப்பார்கள். ஒவ்வொரு நவக்கிரகமும் அதன் தனி வாகனத்தில் காட்சியளிப்பார்கள். சிவாலயங்களில், நவகிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சி அளிப்பதில்லை.

நவக்கிரகங்களை வழிபடும் போது, “சூரியனே போற்றி, சந்திரனே போற்றி, செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி, ராகு, கேதுவே போற்றி” என்று சொல்லி வழிபடலாம்.

The post சிவன் ஆலயங்களில் நவக்கிரகங்களின் திசைகள் எப்படி இருக்கும்? appeared first on Vanakkam London.

By admin