0
தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் புதன் கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது.
சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கேற்ரலுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிவபூமி பாடசாலையை நாடாவெட்டி திறந்துவைத்ததுடன் படிம கல்லையூம் திறந்து வைத்தார்.
இதேவேளை சிவபூமி அறக்கட்டளையானது கடந்த 25 ஆண்டுகளாக அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், 2016இல் கிளிநொச்சியிலும் எமது அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டனில் வசிப்பவர்களுமாகிய வைத்திய கலாநிதி கனகசபை கதிர்காமநாதன் இரட்ணேஸ்வரி தம்பதிகள் மனமுவந்து வழங்கிய இல்லத்தைப் புனரமைத்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது. பெரிய பரப்பளவு கொண்ட தென்மராட்சித் திருநகரில் மாற்றுவலுவுடைய குழந்தைகளை மகிழ்வாய் வாழ வைக்க இந்த பீடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி கெளரவ விருந்தினர் கேன் பற்றுநோய் காப்பக தலைவர் வைத்திய கலாநிதி கமலா வைத்தியநாதன் , சாவகச்சேரி நகர சபை தவிசாளர் சிறிபிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அதிதிகள் உரையை தொடர்ந்து சிவபூமி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.







