• Tue. Feb 3rd, 2026

24×7 Live News

Apdin News

சி.ஏ vs சி.எஸ்: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன? எதிர்கால வளர்ச்சி எப்படி உள்ளது?

Byadmin

Feb 3, 2026


நிறுவனச் செயலாளர்

பட மூலாதாரம், Getty Images

வணிகவியல் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் எழும் பிரதானமான கேள்வி, பட்டயக் கணக்காளராக (சிஏ) ஆக வேண்டுமா அல்லது நிறுவனச் செயலாளராக (சிஎஸ்) ஆக வேண்டுமா என்பதுதான்.

இந்தச் சூழலில்தான் இந்த இரு துறைகள் என்ன, அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பெயரளவில் ஒன்றுபோல தோன்றினாலும் இந்த இரு துறைகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.

பட்டயக் கணக்காளர்கள் வணிகம் மற்றும் நிதித் துறைகளில் பணிபுரிகிறார்கள். அவர்களின் பொறுப்புகளில் தணிக்கை, வரிவிதிப்பு, நிதி மற்றும் பொது மேலாண்மை ஆகியவை அடங்கும். இது நிதி விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பணி.

மறுபுறம், நிறுவனச் செயலாளர் என்பது பெருநிறுவனத்தில் உள்ள மூத்த நிர்வாகப் பதவி. இந்தப் பதவி இயக்குநர் குழு, பங்குதாரர்கள் மற்றும் ஒழுங்குமுறையாளர்களுக்கு இடையே முக்கிய இணைப்பாக செயல்படுகிறது.

By admin