காணொளி: சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவரானதை பார்க்க முடியாத தாய்!
இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்கிழமை தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன என மாநிலங்களவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி தெரிவித்தார்.
இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.
தோல்வியை தழுவிய சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 767 எம்.பி.க்கள் வாக்களித்ததாகவும், இதில் 752 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 15 வாக்குகள் செல்லாத வாக்குகள் எனவும் பிசி மோதி கூறினார்.
குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனின் தாயார் மற்றும் சகோதரர் கூறுவது என்ன?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு