• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

சி.பி.ராதாகிருஷ்ணன்: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு ஊதியம் இல்லை ஏன்? 10 சுவாரஸ்ய தகவல்

Byadmin

Sep 10, 2025


குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு ஊதியம் இல்லை ஏன்?  10 சுவாரஸ்ய தகவல்

பட மூலாதாரம், CPRADHAKRISHNAN/FB

படக்குறிப்பு, சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். குடியரசு துணைத் தலைவர் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பத்துத் தகவல்கள்.

இந்தியாவில் அரசியல் சாசன அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு அடுத்த இடத்தில் குடியரசு துணைத் தலைவர் இடம்பெறுவார்.

முதல் குடியரசு துணைத் தலைவர் யார்?

1. இந்தியா குடியரசான பிறகு முதல் குடியரசு துணைத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர்களாக இதுவரை 14 பேர் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் 14வது குடியரசுத் துணைத் தலைவர்.

2. இந்தியாவில் குடியரசு துணைத் தலைவராக இருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும், இரு முறை அதே பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்துள்ளனர். ஒருவர் இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவர் 1952ஆம் ஆண்டிலிருந்து 1962ஆம் ஆண்டுவரை குடியரசு துணைத் தலைவராக இருந்தார். அதற்குப் பிறகு குடியரசுத் தலைவரானார். இதற்கடுத்ததாக, எம். ஹமீத் அன்சாரி 2007லிருந்து 2017வரை பத்தாண்டுகள் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தார்.

By admin