• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

சி.பி.ராதாகிருஷ்ணன்: தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் வியூகம் கைகொடுக்குமா?

Byadmin

Aug 19, 2025


குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், X@CPRGuv

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதன் பின்னணியில் பாஜகவின் இந்த நகர்வு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

தொடர்ந்து 40 ஆண்டுகளாக பாஜவில் பயணித்ததற்கு வழங்கப்பட்ட பரிசு என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இது நிச்சயமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு பலனளிக்கும் என்று அதிமுக தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு மண்டலத்திற்கு எதையுமே செய்யாமல் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி கொடுப்பதால் மட்டும் தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது என்று திமுக கூறுகிறது.

By admin