• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

சீதையம்மன் ஆலயத்தில் உண்டியல்கள் திருட்டு

Byadmin

Nov 3, 2025


நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை  இரவு (01) இனம் தெரியாத நபர்களால் ஆலயத்தில் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கமராக்கள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆலயத்தின் உட் பகுதியில் பல்வேறு தேவைகள் நிமித்தமாக வைக்கப்பட்டிருந்த ஏழு உண்டியல்களை இனம் தெரியாத நபர்கள் ஆலயத்திற்குள் பிரவேசித்து குறித்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை களவாடிவிட்டு சில்லரை காசுகளை ஆற்றில் கொட்டிவிட்டு சென்றுள்ளதாக ஆலயத்தில் நிர்வாக சபையில் பொறுப்பு வாய்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் லயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த டிக்கட் பணம் சுமார் 53000 ஆயிரம் ரூபாவும் களவாடப்பட்டள்ளது.உண்டியல் பணம் உட்பட நான்கு இலட்சம் ரூபா வரை கலவாடப்பட்டிருக்கலாம் என நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நுவரெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் ஆலயத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

ஆலயத்தில் பாதுகாப்பிற்றகாக பொருத்தப்படடிருந்த சீ.சீ.டிவி கமராக்கள் அனைத்தும் உடைக்கப்பட்ட பின்பே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருடர்கள் ஆலயத்தின் ஆற்றங்கரை வழியாக வருகை தந்து வெளியில் பொருத்தப்பட்’டிருந்த கமராவை உடைத்ததன் பின்பு ஆலயத்திற்கள் உட்பிரவேசித்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டள்ளனர்.

இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக ஆலயத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ஆலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆலய நிர்வாக சபையினர் தெரவிக்கின்றனர்.

The post சீதையம்மன் ஆலயத்தில் உண்டியல்கள் திருட்டு appeared first on Vanakkam London.

By admin