• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

சீனாவின் பிரபல உணவகத்தில் சூப்பில் சிறுநீர் கழித்த இளைஞர்கள் – நிறுவனம் செய்தது என்ன?

Byadmin

Mar 15, 2025


ஹைடிலான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹைடிலான் உலகின் மிகச் சிறந்த சீன ஹாட்பாட் சங்கிலியாக அறியப்படுகிறது.

சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ, இரண்டு பதின்ம வயதினர் ஹாட்பாட் சூப்பில் சிறுநீர் கழித்த கிளைக்குச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது இரண்டு சிறார்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் காணொளி கடந்த மாதம் ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்டது. இந்தச் சம்பவத்தை யார் படம் பிடித்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

குடிபோதையில் இருந்த அந்த 17 வயது சிறார்கள் அந்தச் சம்பவம் நடந்தவுடன் கைது செய்யப்பட்டனர்.

யாரும் அந்த சூப்பை குடித்ததாகத் தெரியவில்லை. ஹைடிலோ அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. அனைத்து ஹாட்பாட் உபகரணங்கள் மற்றும் உணவு உண்ணும் பாத்திரங்களையும் மாற்றியிருப்பதாகவும், மற்ற பாத்திரங்களையும் தூய்மைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

By admin