காணொளி: சீனாவில் டிரெண்டாகும் சோக முகம் கொண்ட குதிரை பொம்மை
சீன தொழிற்சாலையில் நேரிட்ட தவறால் உருவான ‘சோகமான குதிரை’ பொம்மை வைரலாகியுள்ளது.
சந்திர புத்தாண்டுக்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் இந்த பொம்மை வைரலாகி வருகிறது.
சீன ஜோதிடப்படி, 2026 குதிரை ஆண்டாகும். அந்த பொம்மை முதலில் புன்னகைக்கும் அலங்காரப் பொருளாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியின் போது நேரிட்ட பிழை காரணமாக அதன் புன்னகை தலைகீழாகத் தைக்கப்பட்டுவிட்டது.
வாடிக்கையாளர்கள் இந்த சோகமான முகபாவனையை விரும்பி ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறார் கடை உரிமையாளர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு