• Wed. Jan 22nd, 2025

24×7 Live News

Apdin News

சீனா: கார் தாக்குதலில் 35 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Byadmin

Jan 22, 2025


 கார் தாக்குதலில் 35 பேரை கொன்றவருக்கு மரண தணடனை நிறைவேற்றம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தாக்குதல் நடைபெற்ற ஜுஹாயில் உள்ள மைதானத்திற்கு வெளியே மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தும் மக்கள்

  • எழுதியவர், கெல்லி என்ஜி
  • பதவி, பிபிசி நியூஸ்

சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். சீனாவில் கடந்த பத்தாண்டுகளில் நடந்தவற்றிலேயே மிகவும் மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரான ஜுஹாயில் உள்ள விளையாட்டரங்கிற்கு வெளியே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது ஃபேன் வேய்சியோ (62 வயது) என்ற நபர் காரை வேகமாக செலுத்தி மோதியதில், குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இதற்கு சில நாட்களுக்கு கழித்து நடந்த வேறு ஒரு தாக்குதலுக்கு காரணமான மற்றொரு நபருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்தது.

ஷூ ஜியாஜின் (21 வயது) என்ற அந்த நபர் கிழக்குப் பகுதி நகரான வூக்சியில் தான் பயின்ற பல்கலைக்கழகத்தில் பார்ப்போரையெல்லாம் கத்தியால் தாக்கி, 8 பேரை கொலை செய்திருந்தார்.



By admin