• Fri. May 23rd, 2025

24×7 Live News

Apdin News

சீனா, பாகிஸ்தான், தாலிபன் இடையே வளரும் நட்பால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து?

Byadmin

May 23, 2025


ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், WWW.MFA.GOV.CN

படக்குறிப்பு, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தனது சீனப் பயணத்தை முடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரை இஷாக் தார் புதன்கிழமையன்று பீஜிங்கில் சந்தித்தார்.

அதனையடுத்து, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , “சீனாவும் பாகிஸ்தானும் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஒத்துழைப்பின் பரந்த கட்டமைப்பின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கு சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) விரிவுபடுத்துவதற்கு ஆதரவளித்துள்ளன.

By admin